பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின், நகர, தி.மு.க., சார்பில், நான்கு மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாயும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, மூன்று பேருக்கு, மகளிரணி சார்பில், 15

கிருஷ்ணகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின், நகர, தி.மு.க., சார்பில், நான்கு மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாயும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, மூன்று பேருக்கு, மகளிரணி சார்பில், 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நகர செயலாளர் நவாப், தி.மு.க., பிரமுகர் தொழிலதிபர் சீனிவாசன், முன்னாள் நகர் மன்றத்தலைவர் பரிதாநவாப் உள்பட பலர் பங்கேற்றனர். தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கட்டட வளாகத்தில், கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் பாலன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நகராசன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒன்றிய குழுத்தலைவர் கவிதா கோவிந்தராசன், கவுன்சிலர் சக்கரவர்த்தி, பாச்சாமியான் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X