பொது செய்தி

தமிழ்நாடு

வாட்ஸ் ஆப் குழு அமைத்து பாலாற்றில் மணல் திருட்டு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து மணல் திருட்டு நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள பாலாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இதற்காக அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், கொடையாஞ்சி பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் அமைத்து, மணல் திருட்டில் சிலர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து மணல் திருட்டு நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள பாலாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இதற்காக அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், கொடையாஞ்சி பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் அமைத்து, மணல் திருட்டில் சிலர் ஈடுபடுகின்றனர். அதன்படி மணல் எந்த நேரத்தில் எப்படி திருடுவது, போலீசார் எப்போது சோதனைக்கு வருவர், எங்கு மணலை பதுக்கி வைப்பது, மணல் அள்ளும் போது போலீசார் வந்தாலும், அந்த விபரம் குழுக்களில் உள்ளவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தங்கு தடையின்றி மணல் திருடப்படுகிறது. ஒரு மூட்டை, 100 ரூபாய், ஒரு மாட்டு வண்டி மணல், 1,500 ரூபாய்க்கு விற்கின்றனர். இந்த விபரம் வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணத்தை ஆன்லைனில் வங்கியில் செலுத்தி விட்டு தெரிவித்தால், அவர்கள் சொல்லும் இடத்தில் மணலை சேர்த்து விடுகின்றனர். மணல் திருடர்களை பிடிக்கவும், வாட்ஸ் ஆப் குழுக்களை கண்காணிக்கவும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X