நீதிபதிகளை இழிவுப்படுத்தியதாக 5 பேர் கைது: உச்சநீதிமன்ற விமர்சனத்துக்கு பின் நடவடிக்கை

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: நீதிபதிகளுக்கு மிரட்டல் மற்றும் ஆபாச செய்திகள் வரும் போது சி.பி.ஐ.,யோ உளவு அமைப்போ நீதித்துறைக்கு உதவுவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்திருந்த நிலையில், நீதிபதிகள் பற்றிய அவதூறு பதிவுகளுக்காக இதுவரை 5 பேரை சி.பி.ஐ., கைது செய்தது.ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி சமீபத்தில் ஜீப் ஏற்றி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை
CJI, CBI, Arrests, Defamatory Posts, Against, Judges, நீதிபதிகள், இழிவு, பதிவு, நீதிமன்றம், சிபிஐ, கைது

புதுடில்லி: நீதிபதிகளுக்கு மிரட்டல் மற்றும் ஆபாச செய்திகள் வரும் போது சி.பி.ஐ.,யோ உளவு அமைப்போ நீதித்துறைக்கு உதவுவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்திருந்த நிலையில், நீதிபதிகள் பற்றிய அவதூறு பதிவுகளுக்காக இதுவரை 5 பேரை சி.பி.ஐ., கைது செய்தது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி சமீபத்தில் ஜீப் ஏற்றி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு பற்றிய வழக்கை தாமாக முன் வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி ரமணா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விசாரணை நிறுவனங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.


latest tamil news



“நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் பற்றி ஓரிரு இடங்களில், சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக சி.பி.ஐ., எதுவும் செய்யவில்லை. அது எனக்குத் தெரியும். சி.பி.ஐ.,யின் அணுகுமுறையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் சிபிஐ.,யின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இதனை விசாரிக்க வருந்துகிறேன்.” என்று கூறினார்.

இந்நிலையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறைக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் செய்ததாக இதுவரை 5 பேர் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இன்று (ஆக.,08) சிக்கினர். இந்த வழக்கின் விசாரணை இன்டர்போல், எம்.எல்.ஏ.டி., உதவியுடன் தொடரும் என சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஆக-202123:23:46 IST Report Abuse
Vena Suna அநீதி கொடி கட்டி பறக்கிறது ...நீதி செத்து மடிந்து விட்டது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-202123:09:28 IST Report Abuse
Kasimani Baskaran முறைகேடு செய்தால் தண்டனை. ஆனால் முறைகேட்டில் பெற்ற பணத்தை திரும்பக்கொடுத்தால் நோ தண்டனை... வாட் இஸ் திஸ்... பிறகு விமர்சிக்கிறார்களே என்று பாய்வது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு, வழக்குகளை இழுத்தடித்து ஒரு மனிதனின் ஆயுளில் பாதிகாலம் வீணான பின் தீர்ப்பு சொல்வார்கள். மேல் முறையீடு என்று ஆரம்பித்தால் பலர் வழக்கு முடிவதற்குள் இறந்து விடுகிறார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஆக-202121:42:38 IST Report Abuse
sankaseshan பிரசாந்த் பூஷனுக்கு போட்ட மாதிரி 1 ரூபா தண்டனை கொடுத்து கேஸை முடியுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X