அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 08, 2021
Share
அறிவியல் ஆயிரம்இருதய பாதுகாப்புஇளமை பருவத்தில் தொடர்ந்து காய்கறி உணவுகளை அதிகம் எடுப்பது, நடுத்தர வயதில் இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது என அமெரிக்க இருதய கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. பழ வகைகள், காய்கறிகள், தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பருப்பு வகைகள், மீன், தாவர எண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்வது இருதயத்துக்கு

அறிவியல் ஆயிரம்
இருதய பாதுகாப்பு

இளமை பருவத்தில் தொடர்ந்து காய்கறி உணவுகளை அதிகம் எடுப்பது, நடுத்தர வயதில் இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது என அமெரிக்க இருதய கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது. பழ வகைகள், காய்கறிகள், தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பருப்பு வகைகள், மீன், தாவர எண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்வது இருதயத்துக்கு நல்லது. நிறைவுற்ற கொழுப்பு, சோடியம், சிவப்பு இறைச்சி, இனிப்பு, இனிப்பு பானங்களை குறைந்தளவே எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

தகவல் சுரங்கம்
பழங்குடியினர் தினம்

உலகில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆக.,9ல் சர்வதேச பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேலான மொழிகளை பேசுகின்றனர். 2016 ஐ.நா., கணக்கின் படி 2680 பழங்குடியின மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன. 'யாரையும் தவற விடக்கூடாது; பழங்குடியின மக்கள் மற்றும் புதிய சமூக ஒப்பந்தத்திற்கான அழைப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X