பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,956 பேருக்கு கோவிட்: 1,807 பேர் நலம்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,956 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1807 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,60,229 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,956 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,956 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1807 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1,60,229 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 1,956 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,86,97,187 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,083 பேர் ஆண்கள், 873 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,04,299 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,70,971 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,807 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,20,584 ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 4 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Kongu Nadu,இந்தியா
08-ஆக-202120:16:28 IST Report Abuse
Tamilan டாஸ்மாக் உதவியுடன் கேரளத்தை முந்தி முதலிடம் பிடிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X