சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகார்த்திகேயன் 'டான்' படப்பிடிப்பு! அனுமதி இல்லாததால் வழக்கு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டதால், படப்பிடிப்பு குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று மாலை, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'டான்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது,
 சிவகார்த்திகேயன் 'டான்' படப்பிடிப்பு! அனுமதி இல்லாததால் வழக்கு

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டதால், படப்பிடிப்பு குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று மாலை, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'டான்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது, படப்பிடிப்பை பார்வையிட, 300க்கும் மேற்பட்ட மக்கள் பெருங்கூட்டமாக திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்த போது உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, படப்பிடிப்பை ரத்து செய்து படப்பிடிப்பு குழுவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இதுபோன்று படப்பிடிப்புகள் நடப்பதால், நடிகர்களை காண மக்கள் கூட்டம் அலைமோதி, கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலை உருவாக்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X