பொது செய்தி

இந்தியா

முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையானை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, காலை குடும்பத்தினருடன் வழிபட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, 'வி.ஐ.பி., பிரேக்'

திருப்பதி:திருமலை ஏழுமலையானை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.



latest tamil news



தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.


latest tamil news



அவற்றை பெற்றுக் கொண்டு,கோவிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன், பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின், திருச்சானுார் பத்மாவதி தாயாரை வழிபட்ட அவர், சென்னை புறப்பட்டுச் சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V GOPALAN - chennai,இந்தியா
19-ஆக-202115:22:02 IST Report Abuse
V GOPALAN அர்ச்சனை தமிழில் செய்தார்களா
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
11-ஆக-202121:22:53 IST Report Abuse
nallavan திருமதி துர்க்கா அவர்களுக்கு இறைவனுடைய ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
10-ஆக-202110:08:32 IST Report Abuse
BALOU அயோக்கியர்களுக்கு தான் இந்த கடவுள் அனைத்தும் கொடுக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X