உலக நன்மைக்காக புற்று கோவிலில் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக நன்மைக்காக புற்று கோவிலில் வழிபாடு

Added : ஆக 08, 2021
Share
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகில் புற்று கோவிலில் உலக நன்மைக்காக கூழ் காய்ச்சி சிறப்பு வழிபாடு செய்தனர். கரூர் அருகில், வேலாயுதம் பாளையத்திலிருந்து புகளூர் செல்லும் சாலையில் புற்று கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. உலக நன்மைக்காக சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பூ வகைகள், மஞ்சள் கயிறு கம்பங்கூழ், ராகி கூழ் ஆகியவற்றை வைத்து படையலிட்டனர்.

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகில் புற்று கோவிலில் உலக நன்மைக்காக கூழ் காய்ச்சி சிறப்பு வழிபாடு செய்தனர். கரூர் அருகில், வேலாயுதம் பாளையத்திலிருந்து புகளூர் செல்லும் சாலையில் புற்று கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. உலக நன்மைக்காக சுண்டல், சர்க்கரை பொங்கல் மற்றும் பூ வகைகள், மஞ்சள் கயிறு கம்பங்கூழ், ராகி கூழ் ஆகியவற்றை வைத்து படையலிட்டனர். பின், சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். படையலில் இருந்த மஞ்சள் கயிறை அனைவரும் அணிந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X