பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி: செவிலியருக்கு பாராட்டு சான்று வழங்கல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: மாவட்டத்தில் ஏழு கிராமங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதை முன்னிட்டு, செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கிராம செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கரூர்: மாவட்டத்தில் ஏழு கிராமங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதை முன்னிட்டு, செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கிராம செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், தோகைமலை வட்டாரம் ஆர்ச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம் - மேலமாயனூர், கரூர் - கிழக்கு தவுட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - தோட்டக்குறிச்சி, தான்தோன்றிமலை - ஆண்டாங்கோவில், கடவூர் - வரவணை, சங்கிபூசாரியூர் - காணியாளம்பட்டி ஆகிய ஏழு கிராம பகுதிகளில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு. மாவட்டம் முழுவதும், 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ.,க்கள் லியாகத், கவிதா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மந்திராசலம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X