ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு

Added : ஆக 08, 2021
Share
கரூர்: ஆடி அமாவாசையையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வாழைத்தார் விலை சற்று உயர்ந்துள்ளது.தமிழ் மாதங்களில் ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமை, கிருத்திகை, அமாவாசை நாட்களில் அம்மன் கோவில்களில், விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால், ஊரட ங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிப்பாட்டு தலங்களுக்கும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று ஆடி மாத

கரூர்: ஆடி அமாவாசையையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வாழைத்தார் விலை சற்று உயர்ந்துள்ளது.


தமிழ் மாதங்களில் ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமை, கிருத்திகை, அமாவாசை நாட்களில் அம்மன் கோவில்களில், விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால், ஊரட ங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிப்பாட்டு தலங்களுக்கும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று ஆடி மாத அமாவாசை தினத்தில், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவலை காரணம் காட்டி, கரூர் மாவட்டத்தில் கோவில்கள் மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை. இதனால், பொதுமக்கள் ஆடி அமாவாசை தினத்தையொட்டி, வீட்டிலேயே பூஜை ஏற்பாடுகளை செய்ய தயாராகியுள்ளனர். இதனால் நேற்று கரூர், வெங்கமேடு மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் களை கட்டியிருந்தது. ஆனால் வழக்கத்தை விட, வாழைத்தார்களுக்கு சற்று விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 450 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், கற்பூரவள்ளி, 400 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், பச்சை வாழை, 300 ரூபாயில் இருந்து, 350 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X