பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூன்றாவது நினைவு நாள் நிகழ்ச்சி, கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று நடந்தது. கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், கட்சி அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர்

கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூன்றாவது நினைவு நாள் நிகழ்ச்சி, கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று நடந்தது. கரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், கட்சி அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, பாஸ்கரன், நகர செயலாளர்கள் தாரணி சரவணன், ராஜா, அன்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* குளித்தலை நகர, தி.மு.க., சார்பில் சுங்ககேட், நகர அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், பெரியபாலம், பஜனைமடம், உழவர்சந்தை ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளில் கருணாநிதி படத்திற்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, தொகுதி பொறுப்பாளர் சேகர், நகர பொறுப்பாளர் செந்தில்குமார், மாணிக்கம், சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X