சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது லாரி மோதி ஒருவர் படுகாயம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, அரசு பஸ் மீது லாரி மோதியதால், ஜன்னல் ஓரம் அமர்ந்து சென்றவர் படுகாயம் அடைந்தார். தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் சீலமலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், 40; இவர் நேற்று கரூரில் இருந்து, ஈரோடு சென்ற அரசு பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அரசு பஸ், புன்னம் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வேகமாக

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, அரசு பஸ் மீது லாரி மோதியதால், ஜன்னல் ஓரம் அமர்ந்து சென்றவர் படுகாயம் அடைந்தார். தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் சீலமலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், 40; இவர் நேற்று கரூரில் இருந்து, ஈரோடு சென்ற அரசு பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அரசு பஸ், புன்னம் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, அரசு பஸ் மீது மோதியது. அதில், ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கு கையில், படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X