பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால், பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை அனைவரும், புழுக்கத்தில் தவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும், பரவலாக லேசாகவும், கனமாகவும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராசிபுரம் பகுதியில், அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்றும் பகலில்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால், பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை அனைவரும், புழுக்கத்தில் தவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும், பரவலாக லேசாகவும், கனமாகவும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராசிபுரம் பகுதியில், அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்றும் பகலில் வெயிலில் சுட்டெரித்தது. மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் நகரில், மாலை, 4:30 மணிக்கு, வானத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்யத்துவங்கியது. லேசாக துவங்கிய நிலையில், சில நிமிடங்களில் கனமாக மாறியது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில், வெள்ளம்போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை, 5:30 மணிக்கே சாலையில் சென்ற வாகனங்கள், முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.


பள்ளிபாளையத்தில்...: பள்ளிபாளையம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு மணி நேரம் வரை கொட்டி தீர்த்தது. இதேபோல், மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X