பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 38 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சிறப்பு முகாம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'நாமக்கல் கோட்டத்தில், 38 தபால் அலுவலகங்களில், ஆதார் பதிவு, திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது' என, கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: தபால் அலுலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஆதார் முகாமில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார்

நாமக்கல்: 'நாமக்கல் கோட்டத்தில், 38 தபால் அலுவலகங்களில், ஆதார் பதிவு, திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது' என, கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: தபால் அலுலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஆதார் முகாமில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில், முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இ- மெயில் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். தபால் அலுவலகங்கள் விபரம் பின்வருமாறு: நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், கணேசபுரம், நல்லிபாளையம், நாமக்கல் மாவட்ட நீதி மன்ற வளாக அஞ்சலகம், எருமப்பட்டி, மோகனூர், மோகனூர் வடக்கு, பாலப்பட்டி, புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, வளையப்பட்டி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வெல்லாண்டி வலசு, சித்தாளந்தூர், எலச்சிபாளையம், கந்தம்பாளையம். குமாரமங்கலம், பரமத்தி, பாண்டமங்கலம், சீத்தாராம்பாளையம், வேலகவுண்டம்பட்டி, ஜேடர்பாளையம், குச்சிபாளையம், சங்ககிரி துர்க், சங்ககிரி மேற்கு, காளப்பநாயக்கன்பட்டி. முத்துக்காபட்டி, சேந்தமங்கலம், வையப்பமலை, செம்மேடு, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பொத்தனூர், ப.வேலூர், குமாரபாளையம் துணை அஞ்சலகங்களிலும், ஆதார் சேவையை பெறலாம். புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை. ஐந்து வயது மற்றும் 15 வயது முடிந்து, தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழிகளை புதிதாக பதிவுசெய்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். மற்ற வயதினருக்கு, 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். திருத்தம் செய்ய வேண்டுபவர்கள், 50 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X