பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி தின கண்காட்சி துவக்கம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
நாமக்கல்: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நாமக்கல்லில் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்செங்கோடு சரக உதவி இயக்குனர் செந்தில்குமார், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கண்காட்சியில், 25 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஜவுளி ரகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன. துண்டுகள், வேட்டிகள், 80க்கு, 80

நாமக்கல்: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நாமக்கல்லில் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்செங்கோடு சரக உதவி இயக்குனர் செந்தில்குமார், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கண்காட்சியில், 25 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஜவுளி ரகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன. துண்டுகள், வேட்டிகள், 80க்கு, 80 காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம். அகர்லிக் சால்வைகள், காட்டன் மேட் உள்ளிட்ட கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அனைத்து கைத்தறிகளுக்கும், 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில், 15 லட்ச ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தன் பட(செல்பி) மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், கைத்தறி நெசவாளர்கள் ஆறு பேருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று லட்சம் ரூபாய் கடன் உதவி, இரண்டு பேருக்கு, முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது. கைத்தறி துணிநூல் துறை திருச்செங்கோடு சரக கட்டுப்பாட்டு அலுவலர் கார்த்திகேயன், கைத்தறி அலுவலர்கள் பூபதி, அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X