சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, விஷம் குடித்து சிகிச்சை பெற்று திரும்பிய மாணவர் மூச்சு திணறலால் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே, காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் ஜெயராஜ். இவரது மகன் கவின்குமார், 16. பத்தாம் வகுப்பு மாணவர். கடந்த, இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இந்த வகுப்பிற்காக கவின்குமார் மொபைல்

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, விஷம் குடித்து சிகிச்சை பெற்று திரும்பிய மாணவர் மூச்சு திணறலால் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே, காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் கார் ஓட்டுனர் ஜெயராஜ். இவரது மகன் கவின்குமார், 16. பத்தாம் வகுப்பு மாணவர். கடந்த, இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இந்த வகுப்பிற்காக கவின்குமார் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால், சிறிது காலம் செல்லட்டும் என, பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், கடந்த, 26ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X