பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு உண்டியல், பரிசுத் தொகை வழங்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விழிப்புணர்வு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், 59. இவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களது வீடுகளுக்கு இன்று சென்று, கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, உண்டியல்களை வழங்கி, பரிசுத்
 கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு உண்டியல், பரிசுத் தொகை வழங்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விழிப்புணர்வு

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், 59. இவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களது வீடுகளுக்கு இன்று சென்று, கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு, உண்டியல்களை வழங்கி, பரிசுத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு, பள்ளி பருவத்தில் சேமிப்பு பழக்கம் எடுத்துரைத்து, முககவசம் வழங்கினார்.அவருடன், அவரது மனைவியும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான மீனாம்பிகா ஊக்கப்படுத்தி வருவதால், மாணவர்களது பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர் செல்வம் கூறியதாவது:அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், மூன்று கி.மீ., துாரத்தில் உள்ளனர். அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று, கல்வி தொலைக்காட்சி பாட வகுப்புகள், அவற்றை கவனத்தில் எழுதி, படித்தல் குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். மாணவரது வீடு தேடிச் சென்று, அவர்களது சந்தேகங்களை கேட்டறிந்து, விளக்கம் அளித்து வருகிறேன்.
மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு உண்டியல் கொடுத்து, பணம், பரிசு பொருட்கள் வழங்கி வருகிறேன். நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், மாணவர்களது எண்ணிக்கை 75 ஆக இருந்தது; தற்போது 40 புதிய மாணவர்களின் சேர்க்கையுடன் 115 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X