மூச்சுப்பயிற்சி அனைவருக்கும் அவசியம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மூச்சுப்பயிற்சி அனைவருக்கும் அவசியம்!

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 08, 2021
Share
உடற்பயிற்சி போலவே மூச்சுப்பயிற்சியும் அவசியம் என்பதை, கதையுடன் விளக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா: ஒரு துறவி மீது கொண்ட பக்தியால், அவரை தினமும் நினைத்து வழிபடும் வகையில், அந்த துறவி பயன்படுத்திய திருவோடை பெற்றுக் கொண்டார் மகாராணி ஒருவர். அதற்குப் பதிலாக, தங்க திருவோடை துறவிக்கு பரிசாக கொடுத்தார்.அந்த துறவிக்கு தங்க திருவோடு மீதான பற்று ஏதும் கிடையாது. ஆங்காங்கே
சொல்கிறார்கள்

உடற்பயிற்சி போலவே மூச்சுப்பயிற்சியும் அவசியம் என்பதை, கதையுடன் விளக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா: ஒரு துறவி மீது கொண்ட பக்தியால், அவரை தினமும் நினைத்து வழிபடும் வகையில், அந்த துறவி பயன்படுத்திய திருவோடை பெற்றுக் கொண்டார் மகாராணி ஒருவர். அதற்குப் பதிலாக, தங்க திருவோடை துறவிக்கு பரிசாக கொடுத்தார்.

அந்த துறவிக்கு தங்க திருவோடு மீதான பற்று ஏதும் கிடையாது. ஆங்காங்கே வைத்து விட்டு துாங்கி விடுவார். இதை பார்த்த திருடன் ஒருவன், துறவியை அணுகி, 'இவ்வளவு விலை உயர்ந்த திருவோடை கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே போட்டு விடுகிறீர்களே. திருடனான எனக்கு அதுபோன்ற மனநிலை வர வேண்டும்' என கேட்டான்.

அவனை ஏற்றுக் கொண்ட துறவி, 'சரி. இன்று முதல் நீ என்ன செய்தாலும், உன் சுவாசத்தை கவனி. அதை மட்டும் செய்; வேறு ஒன்றும் வேண்டாம்; நீ நினைப்பது நடந்து விடும்' என்றார்.

சில நாட்கள் கழித்து அவரிடம் ஓடி வந்த திருடன், 'முன் போல என்னால் பூட்டை உடைக்க முடியவில்லை; கள்ளச்சாவி போட்டு கதவை திறக்க முடியவில்லை. தவறாக நடக்க முடியவில்லை. எல்லாம் இந்த மூச்சு விவகாரம் தான்' என்றான்.

அப்படியா, நடந்ததை சொல் என்றார். 'கள்ளசாவி போட்டு வீட்டின் பூட்டை திறக்கும் போது என் மூச்சை கவனித்தால், என்னுள் பரவும் ஒரு ஒளி எனக்கு மனத் தெளிவை கொடுத்து திருட விடாமல் செய்து விடுகிறது' என்றான்.

அதற்கு அந்த துறவி, 'நீ உண்மையிலேயே சரியாக மூச்சுப் பயிற்சி செய்கிறாய். அதனால் தான் உனக்கு இந்த சித்தி கிடைத்துள்ளது; தொடர்ந்து செய்' என்று கூறி, பின், சீடராக சேர்த்துக் கொண்டார்.

உண்மையில் மூச்சுப்பயிற்சிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. தினமும் முறையாக செய்து வந்தால் வியத்தகு மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும். ஆனால், முறையாக செய்யும் அளவுக்கு நமக்கு பொறுமை இருப்பதில்லை. 1,000 ரூபாய் செலுத்தி, உடற்பயிற்சி கூட்டத்தில் சேர்வோம். அடுத்த சில நாட்களில், 'போரடிக்கிறது' என கூறி, விட்டு விடுவோம்.மூச்சுப்பயிற்சி அப்படியான பயிற்சியாக இருந்து விடக் கூடாது. தவறாது தினமும் செய்ய வேண்டும். அதை ஒரு பழக்கமாகவும், வழக்கமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறேன்; நுரையீரல் விரிந்து, சுருங்குகிறது. எனக்கும் மூச்சுப்பயிற்சி அவசியமா என சிலர் கேட்கலாம். அனைவருக்கும் மூச்சுப்பயிற்சி அவசியம். நுரையீரல் முழுமையாக இயங்க மூச்சுப்பயிற்சி அவசியம். தகுதியான நபர்களிடம் முறையாக பயிற்சி பெற்று செய்யும் போது, அதன் பலன் இன்னும் அருமையாக இருக்கும்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X