பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி எல்லையை மாற்றியமைக்க வேண்டும்! கிராம சபை தீர்மானத்தை சுட்டிக்காட்டி மனு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோதவாடி ஊராட்சியின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும் என, முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஊராட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி கிராமத்தை ஒட்டி, 350 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குளத்தில் நீர் இல்லாததால், வறட்சி பகுதியாக மாற்றம் கண்டுள்ளது. கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி,

கிணத்துக்கடவு:கோதவாடி ஊராட்சியின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும் என, முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஊராட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி கிராமத்தை ஒட்டி, 350 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குளத்தில் நீர் இல்லாததால், வறட்சி பகுதியாக மாற்றம் கண்டுள்ளது.
கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கோதவாடி ஊராட்சியில், 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தில் குடியிருப்பு பகுதி மட்டுமே ஊராட்சிக்கு சொந்தமானது. கிராமத்தை சுற்றியுள்ள விளை நிலங்கள், நான்கு வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டது. கிழக்குபகுதி விளை நிலங்களும், 350 ஏக்கர் குளமும் குருநல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு சொந்தமானது. வடக்குப்பகுதி கொண்டம்பட்டி ஊராட்சிக்கும், மேற்கு பகுதி கோடங்கிபாளையம் ஊராட்சிக்கும், தெற்கு பகுதி செட்டிக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.
விவசாயிகள், பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கும், கோதவாடி ஆல்கொண்ட பெருமாள் கோவில், செட்டிக்காபாளையம் கிராம எல்லைக்குள் அமைந்துள்ளது.கோதவாடி கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோரின் விவசாய நிலங்கள், தோட்டத்து வீடுகள் அனைத்தும், சுற்றுப்பகுதி வருவாய் கிராமங்களுக்கு கட்டுப்பட்டது. இவர்களின் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கோதவாடி கிராமத்தில் உள்ளன.இதனால், கிராம ஊராட்சியின் நிலபரப்பு வெகுவாக குறைந்து விட்டது.
தோட்டத்து வீடுகளில் குடியிருக்கும் கோதவாடி மக்களுக்கு, குடிநீர் வசதி, வீடு கட்டித்தருதல், ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை உள்ளிட்ட நலத்திட்டங்களை செய்து தரவும் முடிவதில்லை.குறிப்பாக, வேலை உறுதி திட்டத்தில், பணியாளர்கள் வேலை செய்ய, கிராமத்தில் விளை நிலங்கள் இல்லை. பல ஆண்டுகளாக, கிராமத்தின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, கிராம வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் கருதி, ஊராட்சியின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும். இது குறித்து, கடந்த ஆண்டு, ஜன.,26ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X