சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : ஆக 08, 2021
Share
வீராங்கனையை இழிவுபடுத்தியவர் கைதுடேராடூன்: உத்தரகண்டின் டேராடூனைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அரையிறுதியில் அணியின் தோல்விக்கு, பட்டியலினத்தைச் சேர்ந்த வந்தனாவை அணியில் சேர்த்ததே காரணம் என, அவரது வீட்டின் முன் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே இருவர் கைதான நிலையில் சுமித் சவுஹான், 23, என்பவர் நேற்று

வீராங்கனையை இழிவுபடுத்தியவர் கைது

டேராடூன்: உத்தரகண்டின் டேராடூனைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அரையிறுதியில் அணியின் தோல்விக்கு, பட்டியலினத்தைச் சேர்ந்த வந்தனாவை அணியில் சேர்த்ததே காரணம் என, அவரது வீட்டின் முன் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே இருவர் கைதான நிலையில் சுமித் சவுஹான், 23, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

மம்மூட்டி மீது வழக்கு

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு அருகே தனியார் மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மலையாள நடிகர் மம்மூட்டி பங்கேற்றார். அவரைக் காண ஏராளமான கூட்டம் கூடியது. இதையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக மம்மூட்டி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.டாக்டர் மீதான விசாரணை ரத்துஅலகாபாத்: உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான குழந்தைகள் மரணம் அடைந்தனர். இதனால் அங்கு பணியில் இருந்த டாக்டர் கபீல் கான் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், மீண்டும் ஒரு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து டாக்டர் தாக்கல் செய்த மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் இரண்டாம் கட்ட விசாரணைக்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை செயலர் பணி நீட்டிப்பு

புதுடில்லி: முன்னாள் மத்திய உள்துறை செயலரான ராஜிவ் கவுபா, 2019ல் மத்திய அரசின் மிக உயர்ந்த பதவியான மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் கேடரின், 1982ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.பா.ஜ., மீது திரிணமுல் புகார்அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் திரிணமுல் காங்., கட்சி தலைவர்கள் சுதீப் ராஹா மற்றும் ஜெயா தத்தா ஆகியோர் நேற்று முன்தினம் பா.ஜ.,வினரால் தாக்கப்பட்டதாக அக்கட்சி தலைவர்கள் கூறினர். இதனால் கட்சியின் பொதுச் செயலரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி திரிபுரா வர உள்ளதாக தெரிவித்தனர். திரிணமுல் காங்கிரசின் குற்றச்சாட்டை பா.ஜ.,வினர் மறுத்துள்ளனர்.

அல் - குவைதா மிரட்டல்

புதுடில்லி: டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லி போலீசாருக்கு வந்த 'இ - மெயில்' கடிதத்தில் 'அல் - குவைதா பயங்கரவாதிகள் டில்லி விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளனர். அல் - குவைதா இயக்கத்தைச் சேர்ந்த முகமது ஜலால், அவரது மனைவி ஹசீனா ஆகியோர் சிங்கப்பூரில் இருந்து டில்லி வருகின்றனர். இருவரும் அடுத்த மூன்று நாட்களுக்குள் டில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்வர்' என கூறப்பட்டிருந்தது.

நீதிபதியை விமர்சித்தவர்கள் கைது

புதுடில்லி: ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு இருந்த மேலும் இரண்டு பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. நாடு முழுதும் சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளை விமர்சித்து இருந்த 16 பேரில் 13 பேரை சி.பி.ஐ., அடையாளம் கண்டுபிடித்து 11 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் மூன்று பேர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராமத்தில் 100 சதவீத தடுப்பூசி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நுால்புழா ஊராட்சியில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களிடம் ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் மொபைல் போன் ஆகிய எந்த ஆதாரமும் இல்லை. முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X