பொது செய்தி

தமிழ்நாடு

ஏக்கருக்கு 4 டன் தீவன மகசூல்: கே-12 ரக சோளத்தில் சாத்தியம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் மாடுகளுக்கு விளைநிலத்தில் பசுந்தீவனம் கிடைத்தாலும், உலர் தீவனத்துக்கு சோளத்தட்டை முக்கிய ஆதாரமாக உள்ளது. கால்நடை தீவனத்துக்காகவே விவசாயிகள் சோளம் பயிரிடுகின்றனர்.இந்நிலையில், புதிய ரகமான, கே - 12 பயிரிடும் போது, அதிக உலர் தீவன மகசூல் கிடைக்கும், என, கோவை விதைச்சான்று இணை இயக்குனர் வானதி தெரிவித்துள்ளார்.இந்த ரகத்தில், ஏக்கருக்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் மாடுகளுக்கு விளைநிலத்தில் பசுந்தீவனம் கிடைத்தாலும், உலர் தீவனத்துக்கு சோளத்தட்டை முக்கிய ஆதாரமாக உள்ளது. கால்நடை தீவனத்துக்காகவே விவசாயிகள் சோளம் பயிரிடுகின்றனர்.இந்நிலையில், புதிய ரகமான, கே - 12 பயிரிடும் போது, அதிக உலர் தீவன மகசூல் கிடைக்கும், என, கோவை விதைச்சான்று இணை இயக்குனர் வானதி தெரிவித்துள்ளார்.இந்த ரகத்தில், ஏக்கருக்கு நான்கு டன் வரை உலர் தீவன மகசூல் பெறலாம். இந்த ரகத்தின் சான்று விதைகளை, அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த ரகத்தில் விதைப்பண்ணை அமைத்து, விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி விதைச் சான்று அலுவலரை தொடர்பு கொண்டு, அவரின் வழிகாட்டுதலின் பேரில் விதைச் சோளம் உற்பத்தி செய்து, சான்று பெற்றால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும், என, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X