திடீர் கரிசனம் ஏன்?

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். கட்சியில் சீனியர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதால் வருத்தமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு சில முக்கிய வேலைகளை வழங்கி அவரை குஷிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
 டில்லி உஷ்!

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். கட்சியில் சீனியர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதால் வருத்தமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு சில முக்கிய வேலைகளை வழங்கி அவரை குஷிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பார்லிமென்டை முடக்கி வருகின்றன. அவர்களுடன் பேசி தீர்வு காண ராஜ்நாத் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர். மம்தா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் ராஜ்நாத் சிங் மீது மரியாதை வைத்துள்ளனர். அவரிடம் தொடர்பில் இருக்கின்றனர். எனவே தான் இந்த பொறுப்பை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார் மோடி என்கின்றனர். இதற்கு வேறொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ராஜ்நாத் சிங் இந்த மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தாகூர் வகுப்பைச் சார்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற ராஜ்நாத் சிங்கின் உழைப்பு தேவை. இதனால் தான் ராஜ்நாத் சிங் மீது திடீர் கரிசனம் என்றும் பேசப்படுகிறது.


பொதிகையில் விவாதம்



தமிழ் செய்தி சேனல்களில் இரவு நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதில் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளன. ஊடகங்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடக்கும் என்பது தான் அந்த முடிவு. இந்த துறையின் இணை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த முருகன். துார்தர்ஷனின் பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடப்பது இல்லை. ஆனால் இனிமேல் அனல் பறக்கும் அரசியல் விவாதம் பொதிகையில் வர உள்ளதாம். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் இந்த விவாதங்களில் பங்கேற்று தி.மு.க.,வை ஒரு வழியாக்குவர் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.


விரைவில் வழக்குகள் பாயும்?



அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க., தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது.இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் அதற்கான வேலையில் இறங்கி விட்டனர். தி.மு.க., தலைவர்கள் மீதுள்ள வழக்குகளின் கோப்புகள் அனைத்தையும் அலசி வருகின்றனர். அவர்களது சொத்து விபரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. இதில் சிலருக்கு வெளிநாடுகளிலும் சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் தி.மு.க., தலைவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடக்கலாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் இனிமேல் துரிதப்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.


சசி தரூருக்கு பதவி?



லோக்சபாவில் காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்கிற நினைப்பில் இவரை இந்த பதவியில் அமர்த்தியது காங்., மேலிடம். ஆனால் படு தோல்வி தான் கிடைத்தது.இவரை மாற்றிவிட்டு வேறொருவரை தலைவராக்கலாம் என செய்திகள் அடிபட்டன. ஆனால் இதுவரை நடக்கவில்லை. காங்கிரசுக்கு அதிக எம்.பி., சீட் கிடைத்தது தெற்கிலிருந்து/தான்.இதனால் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சசி தரூருக்கு இந்த பதவியைத் தரலாமா என ராகுல் யோசித்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
13-ஆக-202112:34:57 IST Report Abuse
M  Ramachandran பொதிகை டி வி யில் ஒளி பரப்பப்படும் சீறயால் கல் தணிக்கைக்கு உட்படுத்த பட்டு ஒளிபரப்பப்படுகிறது. அதனால் அவை தரம் தாழ்ந்த வசனங்கள் தரம் தாழ்ந்த காட்சி அமைப்புக்கள் இல்லை. மற்ற கார்ப்பரேட் (தமிழ்) சானெல் கல் சொல்லவேகியாகி வேண்டாம். சமூக அழிவிற்கு அவர்களின் வழி பரம்பரையே என எடுத்து காட்டும் வண்ணம் மக்களை கெடுக்க கூடியது. ஆனால் மக்கள் எளிதில் மனதளவில் கெடக்கூடிய காட்சி அமைப்பையே விரும்பி பார்க்க வைப்பதால் தூர தர்ஷாஹ்ன் இவைகளுடன் போட்டி போட்டு போராட முடிய வில்லை.
Rate this:
Cancel
சமநிலை மூர்த்தி உள்ள செய்தி சேனல்களையே யாரும் பார்க்க மாட்றாங்க. பூராம் சீரியல் மோகம், ஓடிடி, இண்டர்நெட், பப்ஜி, கேம்ஸ்னு இருக்காங்க. இதுல பொதிகை சேனலை மக்கள் கைவிட்டு ரொம்ப நாளாச்சு. தன் அரசு ஊடகங்கள் (Bsnl, All india Radio, Doodharshan) வளர்ச்சிக்கு அரசே முட்டுக்கட்டையாக இருப்பது இங்கு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X