ரோடு புதுப்பிக்கும் பணி நிறுத்தம் :தார் லோடு வராததால் காத்திருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு புதுப்பிக்கும் பணி நிறுத்தம் :தார் லோடு வராததால் காத்திருப்பு

Added : ஆக 08, 2021
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியம், இம்மிடிபாளையம் வழியாக, தேவராடிபாளையத்துக்கு பொள்ளாச்சியில் இருந்து டவுன் பஸ் இயக்கப்படுகிறது.கடந்த இரு ஆண்டுகளாக, ரோடு குண்டும் குழியுமாக மாறியதையடுத்து, இரு சக்கர வாகனங்கள் செல்லவே சிரமமாக உள்ளது. மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, லட்சுமிநகர் - கருணாகரபுரி வரை, 2.4 கி.மீ.,க்கு ரோட்டை புதுப்பிக்க அனுமதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியம், இம்மிடிபாளையம் வழியாக, தேவராடிபாளையத்துக்கு பொள்ளாச்சியில் இருந்து டவுன் பஸ் இயக்கப்படுகிறது.கடந்த இரு ஆண்டுகளாக, ரோடு குண்டும் குழியுமாக மாறியதையடுத்து, இரு சக்கர வாகனங்கள் செல்லவே சிரமமாக உள்ளது. மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, லட்சுமிநகர் - கருணாகரபுரி வரை, 2.4 கி.மீ.,க்கு ரோட்டை புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட சக்தி திட்டத்தின் கீழ், ரோடு சீரமைப்பு பணிக்கு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில், ரோடு தோண்டப்பட்டு, கற்கள் பரப்பப்பட்ட நிலையில், பணி நின்று போனது. கடந்த, ஐந்து மாதங்களுக்கு மேலாக, பணிகள் நடக்காமல் தடைபட்டுள்ளது. இதனால், தேவராடிபாளையம், இம்மிடிபாளையம் செல்லும் மக்களும், ரோட்டின் இருபகுதியிலும் உள்ள விவசாயிகளும் சிரமப்படுகின்றனர்.ஊராட்சியில் விசாரித்தபோது, 'இம்மிடிபாளையம் அருகே சிறு பாலம் கட்டும் பணி நடக்கிறது. தார் கொள்முதலுக்காக பணம் செலுத்தப்பட்டுள்ளது. தார் லோடு இன்னும் வரவில்லை. தார் வந்தவுடன் ரோடு பணி துவங்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X