அமைச்சர் அந்தஸ்து வேண்டாம்: எடியூரப்பா திடீர் அறிவிப்பு

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரூ:கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் அந்தஸ்தை வேண்டாம் என கூறியுள்ள துடன், அந்த உத்தரவை திரும்பப் பெறும்படியும் வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சி மேலிட உத்தரவுப்படி சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.
 அமைச்சர் ,அந்தஸ்து ,வேண்டாம்,எடியூரப்பா

பெங்களூரூ:கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் அந்தஸ்தை வேண்டாம் என கூறியுள்ள துடன், அந்த உத்தரவை திரும்பப் பெறும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சி மேலிட உத்தரவுப்படி சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில் எடியூரப்பாவுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கி முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.

இதன்படி எடியூரப்பா முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த பெங்களூரு காவிரி இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்கலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டது. ஆனால் இதை ஏற்க எடியூரப்பா மறுத்து விட்டார். முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் 'முன்னாள் முதல்வருக்கான வசதிகள் எதுவோ அதை மட்டும் செய்து கொடுத்தால் போதும். மற்றபடி அமைச்சர் அந்தஸ்தோ, வேறு எந்தவிதமான சலுகைகளோ எனக்கு வேண்டாம்' என, தெரிவித்துள்ளார்.


சலுகை என்னென்ன?

எடியூரப்பா அமைச்சர் அந்தஸ்தை ஏற்றுக் கொண்டால் காவிரி இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்கலாம். மாத சம்பளம் தவிர ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் 'அலவன்ஸ்' மற்றும் வீட்டு வாடகைக்கு மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் பெற முடியும். ஆண்டுக்கு 1,000 லிட்டர் எரிபொருளை இலவசமாக பெறலாம்.

நாற்காலி, இருக்கை உள்ளிட்ட பொருட்கள் வாங்க 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். வாகனம் வாங்க 21 லட்சம் ரூபாய் பெறுவதுடன், வீடு மற்றும் அலுவலகத்தில் இலவச தொலைபேசி இணைப்பும் வழங்கப்படும். எடியூரப்பாவுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கியுள்ள அரசு உத்தரவுக்கு கர்நாடக மாநில காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202116:45:27 IST Report Abuse
திருமலை நெடுஞ்செழியன் எடியூரப்பா ரொம்ப நல்லவரு... ஊழல் செய்து கொள்ளையடித்த பணம் கோடிகோடியாய் இருக்கும்போது மாநில அரசு சில இலட்சங்களைப் பிச்சைப் போடுவது என்பது எடியூரப்பாவிற்குப் பெருமை தராது. கொள்ளையடித்த பணத்தில் இன்னும் ஆறு தலைமுறை வாழும் அளவுக்குப் பணம் வைத்திருக்கிறார்.
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
09-ஆக-202114:15:13 IST Report Abuse
sankar எந்த ஒரு அரசு பதவிலியும் இல்லாமல் 12 வருடம் பிரியங்கா காந்தி அரசு பங்களா வில் தங்கி இருந்தாரே , அதற்கு என்ன பதில் காங்கிரஸ் தொண்டர்களே .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-ஆக-202109:07:42 IST Report Abuse
M  Ramachandran காங்கிரஸ் நீங்கள் ஏன் பொஙகு கிறீர்கள். நீங்கள் செய்யாத அட்டூழியமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X