பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு விவசாயி சான்றுக்கு 11, 13ம் தேதி சிறப்பு முகாம்!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, சிறு, குறு விவசாயிகள், சான்றிதழ் பெற, சிறப்பு முகாம் இரு நாட்கள் நடைபெற உள்ளது.வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அறிக்கை: குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கான, சிறப்பு முகாம் வரும், 11, 13ம் தேதி, பெதப்பம்பட்டியிலுள்ள, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், நடைபெறுகிறது.சிறு, குறு விவசாயி, சான்று தேவைப்படும்

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, சிறு, குறு விவசாயிகள், சான்றிதழ் பெற, சிறப்பு முகாம் இரு நாட்கள் நடைபெற உள்ளது.வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அறிக்கை: குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கான, சிறப்பு முகாம் வரும், 11, 13ம் தேதி, பெதப்பம்பட்டியிலுள்ள, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், நடைபெறுகிறது.சிறு, குறு விவசாயி, சான்று தேவைப்படும் விவசாயிகள், அனைவரும் பயன்பெறலாம். சான்று உடனடியாக, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் முன்னிலையில் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலரை, 83449 09080 என்ற மொபைல்போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.உடுமலை வட்டார விவசாயிகளுக்காக, தோட்டக்கலை, வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து, வரும், 11,13ம் தேதிகளில் முகாம் நடத்துகிறது.முகாமில், சொட்டு நீர், தெளிப்பு நீர், துணை நீர் பாசனத்தில், தரை மட்ட தொட்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்.வி.ஏ.ஓ., உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள், முகாமில் பங்கேற்பதால், சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல், நில வரைபடம், கூட்டு நில வரைபடம் உட்பட ஆவணங்களை உடனடியாக பெறலாம். சொட்டு நீர் பாசன நிறுவனங்களும் பங்கேற்பதால், மானியத்துக்காக பதிவு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் வரும் போது, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் கொண்டு வந்தால், பிரதமர் கவுரவ உதவி திட்ட சரிபார்ப்பும் செய்து கொள்ளலாம்.குறிச்சிக்கோட்டை, உடுமலை பிர்கா விவசாயிகளுக்கு, உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும், வாளவாடி பிர்காவுக்குட்பட்ட விவசாயிகள், சாளையூர் துணை வேளாண் விரிவாக்க மைய முகாமிலும் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X