பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கக்கல்வி பட்டய படிப்பு தேர்வு: தனித்தேர்வர்களுக்கு அழைப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
உடுமலை:தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கான தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு செப்., மாதம் நடக்க உள்ளது. முதல் மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதனை தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி

உடுமலை:தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கான தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு செப்., மாதம் நடக்க உள்ளது. முதல் மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு, தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதனை தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக, வரும், 11ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத்தவறியவர்கள், 12ம் தேதி, சிறப்பு அனுமதி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.அப்போது, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'வெப் கேமரா' வாயிலாக, புகைப்படம் எடுத்து, கல்வி நிறுவனங்களிலேயே, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.முதல், இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு, 100 ரூபாய், ஒவ்வொரு பாடத்துக்கும் 50 ரூபாய், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் 15 ரூபாய், 'ஆன்லைன்' பதிவு கட்டணத்துக்கு ஒரு விண்ணப்பத்துக்கு, 50 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதியில் விண்ணப்பிக்க, ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தகுதியற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தபால் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கட்டாயமாக நிராகரிக்கப்படும்.இவ்வாறு தேர்வு துறை, அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனித்தேர்வர்கள், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என, கல்வி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X