பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு விவசாயிகள் 163 பேருக்கு சான்று

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், மூன்று இடங்களில் நடந்த முகாமில், சிறு, குறு விவசாயிகள், 163 பேருக்கு சான்றுகள் வினியோகிக்கப்பட்டன.கிணத்துக்கடவு தாலுகாவில், கிணத்துக்கடவு, வடசித்துார், கோவில்பாளையம் ஆகிய மூன்று உள்வட்டங்களில், நேற்று முன்தினம், நுண்ணீர் பாசன திட்டத்தில், மானியம் பெற தேவையான சான்றுகளை, விவசாயிகளுக்கு வழங்கும் முகாம் நடந்தது.வருவாய், வேளாண்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், மூன்று இடங்களில் நடந்த முகாமில், சிறு, குறு விவசாயிகள், 163 பேருக்கு சான்றுகள் வினியோகிக்கப்பட்டன.கிணத்துக்கடவு தாலுகாவில், கிணத்துக்கடவு, வடசித்துார், கோவில்பாளையம் ஆகிய மூன்று உள்வட்டங்களில், நேற்று முன்தினம், நுண்ணீர் பாசன திட்டத்தில், மானியம் பெற தேவையான சான்றுகளை, விவசாயிகளுக்கு வழங்கும் முகாம் நடந்தது.வருவாய், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த முகாமில், சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளிடம் இருந்து, 214 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக, 163 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ்களை, கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி ஆகியோர் முகாமிலேயே வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X