பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரத்தில் ஆவண எழுத்தர் போட்டோ இணைப்பது இன்று முதல் கட்டாயம்!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை-சொத்து விற்பனை பத்திரங்களில், அதை தயாரித்த ஆவண எழுத்தர், வழக்கறிஞர் புகைப்படங்களை இணைப்பது, இன்று முதல் கட்டாயமாகிறது. தமிழகத்தில் சொத்து விற்பனை, அடமானம்,செட்டில்மென்ட் உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மோசடியை தடுக்க, பத்திரங்களில் சொத்து விற்பவர், பெறுபவரின் புகைப்படங்கள் இடம் பெறுவது கட்டாயம்.'ஆன்லைன்'

சென்னை-சொத்து விற்பனை பத்திரங்களில், அதை தயாரித்த ஆவண எழுத்தர், வழக்கறிஞர் புகைப்படங்களை இணைப்பது, இன்று முதல் கட்டாயமாகிறது.

தமிழகத்தில் சொத்து விற்பனை, அடமானம்,செட்டில்மென்ட் உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மோசடியை தடுக்க, பத்திரங்களில் சொத்து விற்பவர், பெறுபவரின் புகைப்படங்கள் இடம் பெறுவது கட்டாயம்.'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டாலும்,

ஆவண தயாரிப்பு நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடப்பது தெரியவந்துள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவு: ஒரு ஆவணம் போலியானது என, கண்டுபிடிக்கப்படும் நிலையில், அதை எழுதி கொடுத்தவர் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதனால், போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனவே, ஆவணத்தின் இறுதி பக்கத்தில், அதை தயாரித்த ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரின் பெயர், உரிம எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஸ்கேன் செய்து சேர்க்க வேண்டும்.

அதனருகே, அவரது கையெழுத்தும் இடம் பெற வேண்டும்.இந்த புகைப்படம் மற்றும் விபரங்கள் மீது சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர், வழக்கறிஞரை அலுவலகத்துக்கு அழைத்து, சார் - பதிவாளர் விசாரித்து உறுதிபடுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆவண எழுத்தர், வழக்கறிஞர் புகைப்படம் இல்லாத பத்திரங்கள் பதிவுக்கு ஏற்கப்படாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X