பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்டிரைக்'கில் பங்கேற்பா? ஊழியர்கள் சம்பளம் ரத்து!

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போருக்கு, 'வேலையில்லை; சம்பளம் இல்லை' என்ற விதியின்படி நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு, பார்லிமென்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாடு முழுதும் உள்ள மின் வாரிய பணியாளர்கள், நாளை பொது

சென்னை-நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போருக்கு, 'வேலையில்லை; சம்பளம் இல்லை' என்ற விதியின்படி நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, தமிழக மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு, பார்லிமென்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாடு முழுதும் உள்ள மின் வாரிய பணியாளர்கள், நாளை பொது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதற்கு, தமிழக மின் வாரியத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதனால், மின் வினியோகம் பாதிக்காமல் இருக்கவும், தடையில்லாமல் மின் வினியோகம் செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மேலும், வேலைக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, 'வேலையில்லை; சம்பளம் இல்லை' என்ற விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அலுவலகங்களிலும், வருகை பதிவேட்டை காலை, 10:45 மணிக்கு முன் முடிக்க வேண்டும். மொத்த பணியாளர்கள், வேலைக்கு வந்தவர்கள், ஒப்புதலுடன் விடுப்பு எடுத்தவர்கள், வேலைக்கு வராதவர்களின் விபரங்களை, தலைமை அலுவலக பணியமைப்பு பிரிவு தலைமை பொறியாளருக்கு, மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
09-ஆக-202119:26:49 IST Report Abuse
K. V. Ramani Rockfort வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போருக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' என்ற அரசாணை நிரந்தரமாக வேண்டும். இந்த அரசாணை அரசின் எல்லா துறைகளுக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். அதே சமயத்தில் வேலை நிறுத்தத்தை தூண்டிவிடும் எல்லா அரசியல் சார்ந்த தொழிலாளர் சங்கங்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X