பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: நாளை முதல் துவக்கம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நாளை, (10ம் தேதி) முதல், 31ம் தேதி நடக்கிறது.இதற்காக, இன்று, 9ம் தேதி பள்ளி அளவில் மேலாண்மை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நாளை, (10ம் தேதி) முதல், 31ம் தேதி நடக்கிறது.இதற்காக, இன்று, 9ம் தேதி பள்ளி அளவில் மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் கணக்கெடுப்பு சார்ந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்தாலோசனை நடக்கிறது.பள்ளி அளவில் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களில் இது நாள் வரை பாட புத்தகங்கள் பெறாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளி செயல்பாடுகளில் சேர்க்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 112 குடியிருப்புகள்; தெற்கு, 141; ஆனைமலை, 141 குடியிருப்புகளில் பணி மேற்கொள்ளப்படுகிறது. வீடு, வீடாக சென்று, பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்டவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர் குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர்.இப்பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வல்கள் மேற்கொள்கின்றனர்.இத்துடன், 'கோவிட் 19' தொற்று காரணமாக பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X