பொது செய்தி

தமிழ்நாடு

4 மாதமாக சம்பளம் தரவில்லை ஊர்க்காவல் படையினர் தவிப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை-கொரோனா பரவல் அதிகமாக இருந்த நாட்களிலும், பணிபுரிந்த ஊர்க்காவல் படையினர், நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.இரவு நேர ரோந்துப் பணி, போக்குவரத்து சீர் செய்தல், கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் பணி மற்றும் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுனர்களாக, மாநிலம் முழுதும், 18 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை-கொரோனா பரவல் அதிகமாக இருந்த நாட்களிலும், பணிபுரிந்த ஊர்க்காவல் படையினர், நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இரவு நேர ரோந்துப் பணி, போக்குவரத்து சீர் செய்தல், கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் பணி மற்றும் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுனர்களாக, மாநிலம் முழுதும், 18 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும், 560 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.இவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறதோ, அந்த நாட்களுக்கான சம்பளம்,அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

மே மாதம் கொரோனா பரவல் காரணமாக, உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையிலும், ஊர்க்காவல் படையினருக்கு, 15 நாட்களுக்கு தொடர்ந்து பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கான சம்பளம் மட்டும் குறித்த நேரத்தில் தரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஊர்க்காவல் படையினர் கூறியதாவது:எங்களுக்கு வேலை நாட்களும் குறைவு; சம்பளமும் குறைவு. போலீஸ் அதிகாரிகள் எங்களை கருவேப்பிலை போல பயன்படுத்திக் கொள்கின்றனர்.அவசர தேவைக்கு மட்டும், எங்களை தேடும் போலீசார், சம்பளம் கேட்டால், 'ஏன் அவசரப்படுகிறீர்கள்' என்கின்றனர்.நான்கு மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.

இதனால், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு மாதந்தோறும் பணி ஒதுக்கி, சம்பளம் தர வேண்டும்.இதற்கு முதல்வர் ஸ்டாலின், டி.ஜி.பி., சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X