'அரிகாட்டோ' டோக்கியோ...'வெல்கம்' பாரிஸ்: வண்ணமயமான ஒலிம்பிக் நிறைவு விழா

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: கொரோனாவை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இதற்காக டோக்கியோ நிர்வாகத்துக்கு உலக விளையாட்டு நட்சத்திரங்கள் 'அரிகாட்டோ'(ஜப்பான் மொழியில் நன்றி) தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக் நடக்க உள்ள பாரிஸ் நகரை வரவேற்றனர். நிறைவு விழா கண்கவர் வாணவேடிக்கையுடன் எளிமையாக நடந்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி, கொரோனா
 'அரிகாட்டோ' டோக்கியோ...'வெல்கம்' பாரிஸ்: வண்ணமயமான ஒலிம்பிக் நிறைவு விழா

டோக்கியோ: கொரோனாவை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இதற்காக டோக்கியோ நிர்வாகத்துக்கு உலக விளையாட்டு நட்சத்திரங்கள் 'அரிகாட்டோ'(ஜப்பான் மொழியில் நன்றி) தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக் நடக்க உள்ள பாரிஸ் நகரை வரவேற்றனர். நிறைவு விழா கண்கவர் வாணவேடிக்கையுடன் எளிமையாக நடந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை 23ல் துவங்கியது. மொத்தம் 18 நாட்கள் நடந்த இப்போட்டியில், அகதிகள் அணி உட்பட 206 நாடுகளை சேர்ந்த 11,090 நட்சத்திரங்கள், 33 போட்டிகளில், 339 பிரிவுகளில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் முதன்முறையாக அதிகபட்சமாக 124 நட்சத்திரங்கள், 18 வகையான போட்டிகளில் விளையாடினர். இம்முறை 340 தங்கம், 338 வெள்ளி, 402 வெண்கலம் என, மொத்தம் 1080 பதக்கம் வழங்கப்பட்டன.


அமெரிக்கா முதலிடம்பதக்கப்பட்டியலில் 93 நாடுகள் இடம் பிடித்தன. இதில், 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் உட்பட 113 பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா (38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம்) 2வது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் (27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம்) 3வது இடத்தையும் பிடித்தன. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 48வது இடம் கிடைத்தது.


பஜ்ரங் கவுரவம்

கடைசி நாளன்று, ஆண்களுக்கான மாரத்தான், வாட்டர் போலோ, பெண்களுக்கான வாலிபால், கூடைப்பந்து உட்பட 8 வகையான போட்டிகள் நடந்தன. அதன்பின் ஜப்பான் தேசிய மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது.

முதலில், கடந்த 17 நாட்கள் நடந்த சுவாரஸ்ய நிகழ்ச்சிகளின் வீடியோ காண்பிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின் வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பு நடந்தது. இதில் அனைவரும் உற்சாகமாக நடனமாடி வந்தனர். சிலர் 'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர், தங்களது பதக்கத்தை காண்பித்து மகிழ்ந்தனர். இந்திய மூவர்ணக் கொடியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஏந்தி வந்தார். இவர், 65 கி.கி., 'பிரீஸ்டைல்' பிரிவில் வெண்கலம் வென்றார்.


நடன நிகழ்ச்சி

மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைத்து வண்ணங்களும் ஒன்று சேர்வது போன்ற 'லேசர்' ஒளியில் இருந்து ஐந்து ஒலிம்பிக் வளையம் தோன்றியது. அதன்பின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்வித்தனர். ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டு கொடி ஏற்றப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின், ஜப்பான் பாரம்பரிய நடனம் அடங்கிய வீடியோ காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.


பாரிஸ் அனுமதிசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் தாமஸ் பாக் முன்னிலையில், ஐ.ஓ.சி., கொடி இறக்கப்பட்டது. அதனை, டோக்கியோ நகர கவர்னர், ஐ.ஓ.சி., தலைவரிடம் வழங்கினார். ஐ.ஓ.சி., தலைவர், வரும் 2024ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள பாரிஸ் நகர மேயரிடம் முறைப்படி வழங்கினார். அப்போது பிரான்சின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரிஸ் நகரின் உலக அதிசயமான ஈபிள் டவர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இடம் பெற்ற வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டது.


முறைப்படி நிறைவு

டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீகோ ஹஷிமோடோ, போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புரையாற்றிய தாமஸ் பாக், ஜப்பான் நகர மக்களுக்கும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின், டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு பெற்றதாக முறைப்படி அறிவித்தார். அடுத்து ஒலிம்பிக் பாரிசில் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்பின் சிறுவர், சிறுமியர் பாடல் நிகழச்சியுடன் ஒலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது.

வரும் ஆக. 24ல் துவங்கவுள்ள பாராலிம்பிக் போட்டிக்கான வீடியோ காண்பிக்கப்பட்டது. முடிவில் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு விழா நிகழ்ச்சி முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-202108:29:20 IST Report Abuse
R.PERUMALRAJA கொரோனாவை காரணம் காட்டி TOKYO ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை எப்படியாவது நிறுத்தவேண்டும் ஜப்பானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த நாய் கரி உண்ணும் சீனாக்காரன் எண்ணத்தில் விழுந்தது மரண இடி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202106:40:59 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்கள். சந்தோசமான விசயம்தான். இன்னும் ஊக்கத்துடன் உழைத்தால் பாரிஸில் பதக்கங்களை குவிக்கலாம். தீவிர முயற்சி செய்த, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X