பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி நடந்த 'ஷூட்டிங்' நிறுத்தம்: கூட்டம் கூடியதால் தொற்று அச்சம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை முக்கோணம் பகுதியில் நடந்த சினிமா 'ஷூட்டிங்'கில், நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை முக்கோணம் மற்றும் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின், 'ஷூட்டிங்' நடந்தது. படப்பிடிப்பு நடக்கும் தகவலறிந்து, நுாற்றுக்கணக்கான மக்கள் ஆற்றுப்பாலத்தின் இருபக்கமும்,
 அனுமதியின்றி நடந்த 'ஷூட்டிங்' நிறுத்தம்: கூட்டம் கூடியதால் தொற்று அச்சம்

ஆனைமலை:ஆனைமலை முக்கோணம் பகுதியில் நடந்த சினிமா 'ஷூட்டிங்'கில், நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை முக்கோணம் மற்றும் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின், 'ஷூட்டிங்' நடந்தது. படப்பிடிப்பு நடக்கும் தகவலறிந்து, நுாற்றுக்கணக்கான மக்கள் ஆற்றுப்பாலத்தின் இருபக்கமும், முக்கோணம் பகுதியிலும், சமூக விலகலின்றி திரண்டனர்.இதனால், பலருக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கூட்டத்தை கலைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.பரபரப்புக்கு மத்தியிலும், படப்பிடிப்பு நடந்ததால் நிலைமையை சரிசெய்ய, வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.அதிக கூட்டம் கூடி பல மணி நேரமாக 'ஷூட்டிங்' நடந்தது. கூட்டத்தால் கொரோனா அதிகரிக்கும் என்பதை உணர்ந்திருக்கும் போலீசார், பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக செயல்படாமல் தாமதமாக வந்து கூட்டத்தை கலைத்தனர். அதன்பின், படப்பிடிப்பை நிறுத்தியது வேடிக்கையாக உள்ளது.மக்களும் அச்சமின்றி கூடுவது ஆபத்தானது என்பதை உணர வேண்டும். மக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்புகளில், சினிமா 'ஷூட்டிங்' நடத்த, வருவாய்த்துறை மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும்.வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறுகையில், ''அனுமதியின்றி 'ஷூட்டிங்' நடத்தியுள்ளனர். தற்போது, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X