பொது செய்தி

தமிழ்நாடு

விதைப்பண்ணையில் பயிர் வளர்ச்சி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்திலுள்ள மாநில விதைப்பண்ணையை, மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் மாநில அரசு விதைப்பண்ணை, 27 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்தபண்ணையில் விதை உற்பத்தி செய்வதோடு, இங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில், விதைகள் சுத்தம் செய்யப்படுகிறது.பின், இந்த விதைகள் சான்று பெற்று தரமான விதைகளாக,
 விதைப்பண்ணையில் பயிர் வளர்ச்சி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்திலுள்ள மாநில விதைப்பண்ணையை, மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் மாநில அரசு விதைப்பண்ணை, 27 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்தபண்ணையில் விதை உற்பத்தி செய்வதோடு, இங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில், விதைகள் சுத்தம் செய்யப்படுகிறது.பின், இந்த விதைகள் சான்று பெற்று தரமான விதைகளாக, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. நடப்பு பருவத்தில் உயர் விளைச்சல் ரகமான பாசிப்பயிறு கோ 8, நான்கு ஏக்கர் பரப்பில் விதை உற்பத்திக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது: கோ- 8 ரகமானது மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டதாகும். குறைந்த பாசன நீரில் மிக குறைந்த காலத்தில், அதாவது 60 நாட்களில் கூடுதல் விளைச்சல் வழங்கக்கூடியது.ரசாயன தழைச்சத்து உரத்தேவையும் இதற்கு குறைவு. இரண்டரை ஏக்கருக்கு, 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது விதைப்பண்ணையில் சாகுபடி செய்துள்ள, பாசிப்பயிறு ரகத்தின் பயிர் வளர்ச்சியை, மாவட்டவேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாதேவன் ஆய்வு செய்தனர்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X