புதிய ரேஷன் கார்டுக்காக பொதுமக்கள் தவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டுக்காக பொதுமக்கள் 'தவம்

Added : ஆக 08, 2021
Share
பல்லாவரம்: புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும், நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக, பரங்கிமலை மண்டல அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகள், பரங்கிமலை மண்டல உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தின் கீழ் வரும்.இங்கு வசிக்கும் பலர், புதிய கார்டுக்கு

பல்லாவரம்: புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும், நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக, பரங்கிமலை மண்டல அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகள், பரங்கிமலை மண்டல உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தின் கீழ் வரும்.இங்கு வசிக்கும் பலர், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு, இந்த அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
குறிப்பாக, புது கார்டு பெற, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இந்த மனுக்களை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது
இதனால், புது ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்த பலர், மண்டல அலுவலகத்திற்கு மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாகவும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். தி.மு.க., தலைமையிலான புதிய அரசு, விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் எனக் கூறி வரும் நிலையில், பரங்கிமலை மண்டல அலுவலகத்தில், பல மாதங்களாக மனுக்கள் தேங்கி கிடப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர் பற்றாக்குறையால், மனுக்கள் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் எனவும், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X