தூய்மைப்பணிக்கு குறைந்த சம்பளம்: உயர்த்தி வழங்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மைப்பணிக்கு குறைந்த சம்பளம்: உயர்த்தி வழங்க எதிர்பார்ப்பு

Added : ஆக 08, 2021
Share
உடுமலை:ஊராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, தினக்கூலியாக, 138 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், எவரும் அப்பணியை மேற்கொள்ள முன்வருவதில்லை. உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப, துாய்மைப் பணியாளர்கள் கிடையாது. மாறாக, 10 ஆண்டுகளைக் கடந்து பணிபுரிபவர்களுக்கும், மாதம்தோறும், 3,600 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.அதேநேரம், சிறப்பு ஊதியம் என்ற பெயரில் கூடுதல்

உடுமலை:ஊராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு, தினக்கூலியாக, 138 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், எவரும் அப்பணியை மேற்கொள்ள முன்வருவதில்லை. உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப, துாய்மைப் பணியாளர்கள் கிடையாது. மாறாக, 10 ஆண்டுகளைக் கடந்து பணிபுரிபவர்களுக்கும், மாதம்தோறும், 3,600 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.அதேநேரம், சிறப்பு ஊதியம் என்ற பெயரில் கூடுதல் பணியாளர்களை நியமித்தாலும், மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், எவரும் இப்பணியை மேற்கொள்ள முன்வருவதில்லை.அதேநேரம், நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், தினக்கூலியாக, 273 ரூபாய் வழங்கப்படுவதால், அனைவருமே அப்பணியை மேற்கொள்ளவே விருப்பம் காட்டுகின்றனர்.துாய்மைப்பணியாளர்கள் கூறியதாவது: ஊராட்சியில், துாய்மைப்பணி மேற்கொள்வோரைக் காட்டிலும், நுாறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.பணி நிரந்தரத்தை எதிர்பார்த்தும், அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் மட்டுமே பல ஆண்டுகளாக பணியைத் தொடர்கின்றனர். நுாறுநாள் வேலை திட்டத்தில், காலையிலேயே பணிகளை முடித்துவிட்டு, பிற வேலைக்கு சென்று விடுவோரும் உண்டு.ஆனால், அதிகாலை முதல் மாலை வரை துாய்மைப் பணியில் ஈடுபடுவோருக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.பெரும்பாலான ஊராட்சிகளில் துாய்மைப்பணியை மேற்கொள்ள, போதிய ஆட்கள் கிடையாது. சம்பளத்தை உயர்த்தி வழங்க, அரசுக்கு, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X