அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மரணம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை-தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, 87, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் இல்லத்தில், தன் குடும்பத்தினருடன், திண்டிவனம் ராமமூர்த்தி வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். மறைந்த

சென்னை-தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, 87, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் இல்லத்தில், தன் குடும்பத்தினருடன், திண்டிவனம் ராமமூர்த்தி வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

மறைந்த ராமமூர்த்தியின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், திண்டிவனம் காவேரிபாக்கத்தில் உள்ள வீட்டுக்கு, ராமமூர்த்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. ராமமூர்த்தியின் மனைவி சரோஜினி தேவி, 2015ல் மறைந்தார். இவர்களுக்கு, டாக்டர் கண்ணையன் என்ற மகனும், கிருஷ்ணலதா, ஆண்டாள், ஸ்ரீதேவி என, மூன்று மகள்களும் உள்ளனர்.கடந்த 1962ல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி தலைமையிலான கட்சியில், திண்டிவனம் லோக்சபா தேர்தலில், இவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின், காமராஜர் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைந்து, 1967 முதல், 1971 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.பின், 1976 முதல் 84 வரை எம்.எல்.சி.,யாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார்; 1984 முதல் 1990 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். பின், 1991 முதல் 96 வரை திண்டிவனம் லோக்சபா எம்.பி.,யாகவும், 1999 முதல், 2001 வரை தமிழக காங்., தலைவராகவும் இருந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், காங்., கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கேட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரசில் இருந்து வெளியேறி தமிழக தேசியவாத காங்., தலைவரானார்.பின், அக்கட்சியில் இருந்தும் விலகி, ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை நடத்தினார்.ராமமூர்த்திக்கு, தமிழகஅரசின் காமராஜர் விருது, அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X