அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஒடிசாவில் உள்ளது போன்ற குடிநீர் திட்டம் துவக்குங்க!'

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'ஒடிசாவில் துவக்கப்பட்டுள்ளது போல, ஐ.எஸ்.ஓ., 10500 தரம் உடைய குடிநீரை, குழாய்கள் வாயிலாக வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் நகரங்களில் தான், மிகவும் தரமான குடிநீர் கிடைப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில்

சென்னை-'ஒடிசாவில் துவக்கப்பட்டுள்ளது போல, ஐ.எஸ்.ஓ., 10500 தரம் உடைய குடிநீரை, குழாய்கள் வாயிலாக வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் நகரங்களில் தான், மிகவும் தரமான குடிநீர் கிடைப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில் கழிப்பறையில் வரும் தண்ணீரை கூட பருகலாம்; அது, மிகவும் சுவையாகவும், துாய்மையாகவும் இருக்கும் என்பர். ஒரு முறை நான் சுவிட்சர்லாந்து சென்றிருந்தேன். அங்குள்ள விடுதி அறையில் குடிநீர் வழங்கவில்லை. குடிநீர் கேட்ட போது, 'கழிப்பறையில் உள்ள குழாயில், பிடித்து குடிக்கலாம்; இங்கு எல்லா நீரும் குடிநீரே' என்றனர்.அந்த நகரங்களில் வழங்கப்படுவது போன்ற, துாய்மையான ஐ.எஸ்.ஓ., 10500 தரம் உடைய குடிநீர், நாட்டில் முதன் முறையாக, ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான புரியில், இப்போது குழாய்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.

ஒடிசாவில் மேலும் 17 நகரங்களில், இதேபோன்ற குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒடிசாவில் செயல்படுத்துவது போன்ற திட்டத்தை, தமிழகத்திலும் செயல்படுத்தினால், குடிநீருக்காக மக்கள் செலவழிக்கும் பணத்தில், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, துாய்மையான குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் போது, தமிழகத்தில் செயல்படுத்த முடியாதா என்ன; ஒடிசாவில் வழங்கப்படும் தரத்திலான குடிநீரை, தமிழகத்திலும் வழங்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஆக-202110:07:58 IST Report Abuse
R.RAMACHANDRAN ஒடிசா அனைத்திலும் முன்னிலை வகிக்க காரணம் அந்த மாநில முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்ய அவரை அர்பணித்துக் கொண்டதே.ஆதாயம் எதிர்பார்க்காமல் கடமையை செய்வதால் சாத்தியமாகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X