பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பொருளாதாரத்தின் பின்தங்கியோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்தும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வருக்கு பாலகுருசாமி எழுதியுள்ள கடிதம்:பொது பட்டியலில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, அரசின் கல்வி மற்றும்

சென்னை--மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பொருளாதாரத்தின் பின்தங்கியோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்தும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வருக்கு பாலகுருசாமி எழுதியுள்ள கடிதம்:பொது பட்டியலில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், 30 மாதங்களுக்கு முன் அமலுக்கு வந்தது.மத்திய அரசு துறைகளில், இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாநில அளவில் இந்த ஒதுக்கீடுக்கான தகுதிகளை நிர்ணயித்து கொள்ள, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டை, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட, 15 மாநிலங்கள் அமல்படுத்தி விட்டன. ஆனால், சமூக நீதியை செயல்படுத்துவதில் எப்போதும் முன்னிலையில் உள்ள தமிழகம், பொருளாதார இட ஒதுக்கீட்டு முறையை இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது.சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்ற இரண்டுக்கும் தீர்வு காண்பதே சமூக நீதி. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை ஒதுக்குவது கூடாது.

தமிழக மக்கள் தொகையில், 21 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொது பட்டியலில் உள்ளனர்; அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.எனவே, பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றும் வகையிலான, சமூக நீதிக்கான வழியில் செயல்படும் தமிழக அரசு, பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டு முறையை பரிசீலித்து, உறுதியான மற்றும் தேவையான நடவடிக்கையை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஆக-202109:26:01 IST Report Abuse
R.RAMACHANDRAN கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது தீண்டாமை. முற்பட்ட வகுப்பினரின் சிலர் வறுமையில் வாழ்ந்தாலும் அவரகள் தீண்டாமையை கடைபிடிக்க தவறுவது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் குரல் கொடுக்கின்றனர் இந்த நாட்டில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X