பொது செய்தி

தமிழ்நாடு

மாலை 6:00 மணிக்கு மேல் கடை திறக்க சேலத்தில் தடை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சேலம்-கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாநகரில் இன்று முதல் மாலை, 6:00 மணியுடன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:சேலம் மாநகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து மால், ஜவுளி, நகை கடை, வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட்கள் மாலை, 6:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. குளிர்சாதன வசதி

சேலம்-கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாநகரில் இன்று முதல் மாலை, 6:00 மணியுடன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:சேலம் மாநகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து மால், ஜவுளி, நகை கடை, வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட்கள் மாலை, 6:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது.ஞாயிறு அன்று அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. ஏற்காடு செல்ல, சனி, ஞாயிறு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் செல்ல, இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அவசியம்.இறைச்சி, மீன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, திறந்த வெளியில் தனித்தனி கடையாக செயல்படுவதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.'நெகட்டிவ்' கட்டாயம்ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட அறிக்கையில், 'கர்நாடக மாநிலத்தில் இருந்து, சத்தியமங்கலம் வழியாக வாகனங்களில் தமிழகம் வருவோர், 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X