புதுக்கோட்டை-காதல் மனைவி பிரிவால், 20 ஆண்டுகளாக இரவு, பகல் துாங்காமல் கண்மாய்கரை பாறையில் அமர்ந்து இருப்பவருக்கு, அவரது தாய் உணவளித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலங்குடியில் வசிப்பவர், மூதாட்டி நஞ்சாயி, 70; இவருக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் நாகராஜ், 40, கடந்த 20 ஆண்டு களுக்கு முன், கோவையில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து, மூலங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். கேரள பெண்தகவலறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், அன்று இரவோடு இரவாக வேனில் வந்து, பெண்ணை கேரளாவிற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
மறுநாள் காலை இதை கேள்விப்பட்ட நாகராஜ், மனநிலை பாதிக்கப்பட்டார். நாளடைவில் சுய சிந்தனையற்ற நிலைக்கு மாறினார். அண்ணன்கள் மற்றும் தாய் நஞ்சாயி ஆகியோர், நாகராஜை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும், சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நாகராஜ், தெய்னி கண்மாய் பகுதியில் உள்ள ஒரு பாறையில் போய் அமர்ந்து விட்டார். அதன்பின் வீட்டுக்கு அவர் வரவே இல்லை. அதே பாறையில் இரவு, பகல் துாங்காமல் அமர்ந்த நிலையில் உள்ளார்.ஊர் பொதுமக்கள், உறவினர்கள் அவரை அழைத்தும், அதே இடத்தில், 20 ஆண்டுகளாக அமர்ந்தபடியே இருக்கிறார். அவரது தாய் நஞ்சாயி, 100 நாள் ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி, மகனை காப்பாற்றி வருகிறார்.
தாய் கண்ணீர்நஞ்சாயி கண்ணீருடன் கூறியதாவது:எனக்கு வயதாகி விட்டதால், இனி, 100 நாள் வேலை பார்க்க முடியாது. என் இரண்டு மகன்களில் ஒருவர் கோவையிலும், மற்றொருவர் கொப்பனாபட்டியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து, அவரவர் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.என் மூன்றாவது மகன் நாகராஜ், இந்த நிலையில் உள்ளதை என்னால் பார்க்க முடிய வில்லை. அவருக்கு, தினமும் 2 கி.மீ., நடந்து, மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறேன். கலெக்டர், எங்கள் நிலையை அறிந்து, தமிழக அரசின் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE