பொது செய்தி

தமிழ்நாடு

நந்தவன பராமரிப்பில் ஊழியர்கள்! நீர் ஸ்தலத்தில் பழிவாங்கும் நிர்வாகி?

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருச்சி-திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் வழிபாட்டு பணி செய்யும் ஊழியர்களை, நந்தவன பராமரிப்பில் கோவில் நிர்வாக அலுவலர் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில், நீர் ஸ்தலமாக போற்றப்படுவது, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில். இதன் நிர்வாக அலுவலராக இருப்பவர், உதவி கமிஷனர் மாரியப்பன்.சிவன், அம்மன்

திருச்சி-திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் வழிபாட்டு பணி செய்யும் ஊழியர்களை, நந்தவன பராமரிப்பில் கோவில் நிர்வாக அலுவலர் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில், நீர் ஸ்தலமாக போற்றப்படுவது, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில். இதன் நிர்வாக அலுவலராக இருப்பவர், உதவி கமிஷனர் மாரியப்பன்.சிவன், அம்மன் தவிர்த்த மற்ற பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை, நைவேத்யம் செய்யும் பரிஜாதகர், நகைகளை கணக்கிடும் கொல்லநாயகம், உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்பவர்,

அம்மன் முன் வேதம் சொல்லும் அத்யான பட்டர், மடப்பள்ளி பணியாளர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.'ஆப்சென்ட்'இவர்களை நந்தவனத்தை துாய்மைப்படுத்தும் பணியில், மாரியப்பன் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை கல், மண், பெரிய பாறாங்கற்களை துாக்கி செல்ல கட்டாயப்படுத்துவதாகவும், அதை மாரியப்பன் முன்னின்று மேற்பார்வை செய்வது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.இதுபோன்ற கடுமையான வேலைகளை செய்து பழகாத அவர்கள், கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர்.ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து அவமதிக்கும் நோக்கில், உதவி கமிஷனர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அர்ச்சனை தட்டு துாக்குவோரை, கற்கள், மண்சட்டிகளை துாக்க வைக்கிறார். 'அவரை எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே 10 நாட்கள், 'ஆப்சென்ட்' போட்டு வேலைக்கு வரக்கூடாது என மிரட்டுகிறார்' என்று கோவில் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் மற்றும் திருச்சி மாவட்ட இணை ஆணையர்ஆகியோருக்கு புகார் அனுப்பி உள்ளனர்.பின்னணி என்ன?பிரசாத ஸ்டால் உட்பட பல விஷயங்களில், நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக, பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வெளியாயின. கோவிலில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய விஷயங்களை கசியவிட்டது இவர்கள் தான் என்ற எண்ணத்தில், உதவி கமிஷனர் மாரியப்பன் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

பழிக்கு பழியா?

பிரசாத ஸ்டால் உட்பட பல விஷயங்களில், நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக, பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வெளியாயின. கோவிலில் நடக்கும் முறைகேடுகள் பற்றிய விஷயங்களை கசியவிட்டது இவர்கள் தான் என்ற எண்ணத்தில், உதவி கமிஷனர் மாரியப்பன் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X