பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் வெறிச்சோடியது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்--கொரோனா பரவலை தடுக்க ஆடி அமாவாசையான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதித்ததால், தீர்த்த கரை வெறிச்சோடியது.ராமேஸ்வரம் வந்த பக்தர்களின் வாகனத்தை ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பிரப்பன்வலசையில் போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பினர். இருப்பினும் அரசு பஸ்சில் ராமேஸ்வரம் வந்திறங்கிய பல

ராமேஸ்வரம்--கொரோனா பரவலை தடுக்க ஆடி அமாவாசையான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதித்ததால், தீர்த்த கரை வெறிச்சோடியது.

ராமேஸ்வரம் வந்த பக்தர்களின் வாகனத்தை ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பிரப்பன்வலசையில் போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பினர். இருப்பினும் அரசு பஸ்சில் ராமேஸ்வரம் வந்திறங்கிய பல பக்தர்கள் அக்னி கடலில் நீராட முடியாமல் போனதால், மீனவர்கள் புழக்கத்திலுள்ள கடற்கரையில் நீராடி சென்றனர்.

மேலும் பக்தர்கள் கோபுர தரிசனம் செய்ய ரதவீதியில் செல்லாதபடி, போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து தடை ஏற்படுத்தினர். இதனால் பக்தர்கள் மனக்குமுறலுடன் திரும்பி சென்றனர்.வெறிச்சோடிய சதுரகிரிஆடி அமாவாசையையொட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலில் நேற்று சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது.

ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், கோயில் அலுவலர்கள் செய்தனர்.பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோயில் வெறிச்சோடியது. தாணிப்பாறையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நேற்று முன்தினம் முதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். சில பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாசலில் சூடம் ஏற்றி சதுரகிரியை நோக்கி வணங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X