சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் நபரிடம் பேஸ்புக்கில் பழகி ரூ.4 லட்சம் மோசடி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -திண்டுக்கல் நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதியிடம் பேஸ்புக்கில் பழகி வேலை வாங்கி தருவதாக ரூ.4.4 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த யூச்சன்ன கிறிஸ்டியனை 35, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி 43. தனியார் பள்ளி ஆசிரியர். இவரிடம் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் கனடாவில் வேலை வாங்கி

திண்டுக்கல்- -திண்டுக்கல் நிலக்கோட்டை பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதியிடம் பேஸ்புக்கில் பழகி வேலை வாங்கி தருவதாக ரூ.4.4 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த யூச்சன்ன கிறிஸ்டியனை 35, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி 43. தனியார் பள்ளி ஆசிரியர். இவரிடம் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சத்து 4 ஆயிரம் பெற்று ஏமாற்றினார். இது தொடர்பாக சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் குருவெங்கட் தலைமையில் போலீசார் தேடி வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த யூச்சன்ன கிறிஸ்டியனை 35, நேற்று கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், பேஸ்புக்கில் நேகா என்ற பெண்ணுடன் வெங்கடாஜலபதிக்கு பழக்கம் இருந்துள்ளது. அவர் கனடாவில் வேலை இருப்பதாகவும், யூச்சன்ன கிறிஸ்டியனை தொடர்பு கொள்ள கூறியுள்ளார்.

வெங்கடாஜலபதி யூச்சன்ன கிறிஸ்டியனை தொடர்பு கொண்ட போது, விசா, மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவைக்காக ரூ.4.4 லட்சம் கேட்டுள்ளார். வெங்கடாஜலபதியும் பல தவணைகளில் பணம் அனுப்பியுள்ளார். மேலும் ரூ.2 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த வெங்கடாஜலபதி போலீசில் புகார் அளித்தார். மோசடி நபர் யூச்சன்ன கிறிஸ்டியன் கடந்த 2 ஆண்டுகளாக பெருந்துறை அருகே சென்னிவலசு பகுதியில் வசித்து வந்தது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X