பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகள் ஊடுருவலைத் தடுக்க தேனீ வளர்ப்பு! விவசாயிகளுக்கு வேளாண் துறை 'டிப்ஸ்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுவதைத் தடுக்க, தேனீக்களை வளர்க்க வேண்டும் என, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்கும் முறைகள் குறித்து, விவசாயிகள் கூட்டம் சிறுமுகையில் நடந்தது. வேளாண் விரிவாக்க துணை இயக்கம், தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டம் மற்றும்

மேட்டுப்பாளையம்;காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுவதைத் தடுக்க, தேனீக்களை வளர்க்க வேண்டும் என, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்கும் முறைகள் குறித்து, விவசாயிகள் கூட்டம் சிறுமுகையில் நடந்தது. வேளாண் விரிவாக்க துணை இயக்கம், தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டம் மற்றும் சிறுமுகை வனத்துறை சார்பில் இக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு, துணை வேளாண் அலுவலர் நாராயணசாமி தலைமை வகித்தார்.வேளாண் துணை இயக்குனர் ஷபி அகமது பேசியதாவது: வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால், யானைகள் வழித்தடம் மாறி, விவசாய நிலங்களுக்கு வந்து, பயிர்களை சேதம் செய்கின்றன.பயிர் சேதங்களைத் தடுக்க, அரசும் வேளாண்மை துறையும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, தேனீப் பெட்டிகள் அதிகளவில் வைத்து, தேனீக்கள் வளர்க்க வேண்டும். அதன் சத்தத்தைக் கேட்கும் யானைகள் திரும்பிச் செல்கின்றன.
ஹேர்போலிவ்வனவிலங்குகளுக்கு பிடிக்காத பயிர்களை, பயிர் செய்ய வேண்டும். அப்போதுதான் அவை, வயலுக்குள் ஊடுருவாது. அதேபோன்று காட்டுப் பன்றிகள் வருவதைத் தடுக்க, ஹேர்போலிவ் என்ற மருந்தை அடிக்க வேண்டும்.தண்ணீரை சிக்கனப்படுத்த சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் முறையை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு பாய்ச்சப்படும் தண்ணீரை, சொட்டு நீர் பாசனத்தின் வாயிலாக, 3 ஏக்கருக்கு பாய்ச்ச முடியும்.எனவே, நீர் சேமிப்பு மிகவும் முக்கியமாகும். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு துணை இயக்குனர் ஷபி அகமது பேசினார்.
கூட்டத்தில், அட்மா திட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன், சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பேசினர்.ஹேர்போலிவ் மருந்து கம்பெனி நிர்வாக இயக்குனர் சுதர்சன், மருந்தின் தன்மை குறித்து விளக்கினார்.வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சரிதா,உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மகேந்திரன், ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X