அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் அரசு புறம்போக்கு நிலம்: மீட்க இ.கம்யூ., வலியுறுத்தல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:இரும்பறை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, பொதுவழிப்பாதை தடுப்புகளை அகற்ற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரமடை ஒன்றியக் குழு கூட்டம், சிறுமுகையில், நடந்தது.கூட்டத்தில், இரும்பறை கிராமத்தில் தனியார் கிரஷர் நிர்வாகத்தினர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு

மேட்டுப்பாளையம்:இரும்பறை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, பொதுவழிப்பாதை தடுப்புகளை அகற்ற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரமடை ஒன்றியக் குழு கூட்டம், சிறுமுகையில், நடந்தது.கூட்டத்தில், இரும்பறை கிராமத்தில் தனியார் கிரஷர் நிர்வாகத்தினர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் செல்லும்பொது வழி பாதையை, கற்களை வைத்து தடுத்துள்ளனர்.

இந்த தடுப்புகளை உடனடியாக வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்த வேண்டும்.2015ம் ஆண்டு முதல், இதுவரைஇலவச வீட்டு மனை பட்டா கேட்டு, ஏராளமான ஏழை குடும்பத்தினர் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும்.தகுதியற்ற நிலங்களில் குடிசை அமைத்து வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு, மற்ற இடங்களில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும், 16ம் தேதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் துரைசாமி, பொருளாளர் மணி, துணை செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X