சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 2 கார் மோதல் வக்கீல் உட்பட மூவர் பலி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை--மதுரை அருகே இரு கார்கள் மோதிய விபத்தில், வழக்கறிஞர் உட்பட மூவர் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலுாரைச் சேர்ந்தவர் காசிமணி, 46; எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர், மனைவி, மகன், மருமகன், உறவினர் ஆகியோருடன், தன் உறவினர் திருமணத்திற்காக மதுரையில் புத்தாடைகள், நகைகள் வாங்கி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'இன்னோவா' காரில் ஊர்
 மதுரையில் 2 கார் மோதல்  வக்கீல் உட்பட மூவர் பலி

மதுரை--மதுரை அருகே இரு கார்கள் மோதிய விபத்தில், வழக்கறிஞர் உட்பட மூவர் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலுாரைச் சேர்ந்தவர் காசிமணி, 46; எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர், மனைவி, மகன், மருமகன், உறவினர் ஆகியோருடன், தன் உறவினர் திருமணத்திற்காக மதுரையில் புத்தாடைகள், நகைகள் வாங்கி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'இன்னோவா' காரில் ஊர் கிளம்பினார்.

அதேசமயம் மதுரை கே.புதுார் வழக்கறிஞர் முகமது ரஜப்தீன், 45 உட்பட நான்கு பேர், பேரையூர் பகுதியில் நடந்த கிடா விருந்தில் பங்கேற்று, மதுரைக்கு, 'டாடா டியாகோ' காரில் திரும்பினர். டி.கல்லுப்பட்டி குன்னத்துார் அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதின.இதில் முகமதுரஜப்தீன், அவருடன் வந்த நாகூர்மீரான், 46; வஹாப், 47 ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களுடன் வந்தவர் மற்றும் காசிமணி தரப்பில் ஐந்து பேரும் காயமடைந்து, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X