பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காக்களில் கொசு மருந்து தெளிப்பு பணி தீவிரம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சிந்தாதிரிப்பேட்டை: கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பூங்காக்களில் கொசு உற்பத்தியை தடுக்க, கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியில் உள்ள அனைத்து

சிந்தாதிரிப்பேட்டை: கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பூங்காக்களில் கொசு உற்பத்தியை தடுக்க, கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும், இந்த பணியை தீவிரப்படுத்த, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிந்தாதிரிபேட்டை மே தினப் பூங்கா முழுதும், கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், '‛டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு தினசரி அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. 'தற்போது, பூங்காக்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X