பொது செய்தி

தமிழ்நாடு

'சமய வழிபாட்டைபேணி காக்கணும்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள சீரடி சாய் பைரவர் தியான பீடத்தில், குளோபல் ஸ்ரீ சாயி சேவா பரிவார் அமைப்பின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.நிறுவன தலைவர் சாய் செந்தில்குமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், சேவா பாரதி மாநில தலைவர் ராமநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:கோவிட் தொற்று காலத்தில், சேவாபாரதி சார்பில், பல்வேறு மக்கள் நலப்பணிகள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள சீரடி சாய் பைரவர் தியான பீடத்தில், குளோபல் ஸ்ரீ சாயி சேவா பரிவார் அமைப்பின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.நிறுவன தலைவர் சாய் செந்தில்குமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், சேவா பாரதி மாநில தலைவர் ராமநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:கோவிட் தொற்று காலத்தில், சேவாபாரதி சார்பில், பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு, 35 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இரண்டாம் அலையின்போது, வீட்டில் தனிமையில் இருந்த, 6 ஆயிரம் பேருக்கு, உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டன.சேவாபாரதி சார்பில், மலைவாழ் மக்களுக்கு, பல்வேறு நல பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் சாயி பக்தர்களும், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மூத்த வக்கீல் ரங்கராஜ் பேசுகையில்," நமது சமய வழிபாட்டை பேணி காக்க வேண்டியது, நம் அனைவரது கடமை" என்றார்.நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் சீரடி குமார், டாக்டர் காளிதுரை, சென்னை வெங்கடேசன், பாம்பன் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X