பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு: அன்னதானம், உதவிகள் வழங்கல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள், தி.மு.க.,வினரால் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.சூலுார் அடுத்த திருச்சி ரோடு தனியார் மில் அருகே டூரிஸ்ட் வேன், டாக்ஸி, டெம்போ, வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் துவக்கப்பட்டது.பெயர்ப் பலகையை, சூலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் தளபதி முருகேசன்
 கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு: அன்னதானம், உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள், தி.மு.க.,வினரால் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.சூலுார் அடுத்த திருச்சி ரோடு தனியார் மில் அருகே டூரிஸ்ட் வேன், டாக்ஸி, டெம்போ, வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் துவக்கப்பட்டது.பெயர்ப் பலகையை, சூலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார். கண்ணம்பாளையம் பேரூராட்சி பொறுப்பாளர் சண்முகம் கொடியேற்றினார்.ஒன்றிய தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன், செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அன்னதானம்தி.மு.க., இலக்கிய அணி சார்பில், நல்லகவுண்டம்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட, 750 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேனாதிபதி, ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ராஜேந்திரன், இலக்கிய அணி நிர்வாகி மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம்சிக்காரம்பாளையத்தில் உள்ள அன்புமலர் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் அன்னதானம் வழங்கினார்.காரமடை பேரூராட்சி, சிக்காரம்பாளையம், பெள்ளேபாளையம் ஊராட்சிகளில், முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி குழந்தைகள், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசரப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பெ.நா.பாளையம் வீரபாண்டி பிரிவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.கூடலுார் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் துணைத்தலைவர் கோகிலா மணி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X